பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் இ 81

'பாரதியின் கட்டுரைகள்' என்ற பெயரில் தத்துவக் கட்டுரைகள், மாதர், சமூகம் என்ற தலைப்புகளில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் வந்துள்ளன. பாரதியின் உரைநடை 19-ஆம் நூற் றாண்டின் இறுதியில் தோன்றிய தமிழ் உரை நடைக்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். கவிதைகள் பாடிய பாரதியின் சொல்லோட்டம் உரைநடையில் காணப் பெறவில்லை. சாதாரண மாகத் திண்ண்ையில் அமர்ந்து பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் இரண்டு பெரியவர்கள் அல்லது மூதாட்டிகள் அன்றைய நிலையில் எப்படிச் சாதாரணச் சொற்களின் மூலம் தம்முடைய உரை யாடல்களை நடத்துவார்களோ அதேபோல்தான் கவிஞரின் கட்டுரைகள் அமைந்திருக்கின்ற்ன.

இந்தக் காரணத்தால் அவருடைய உரைநடை யைப் படிக்கும்பொழுது அவர் சொல்லுகின்ற கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர, உணர்ச்சியூட்டும் ஆற்றல் அதிகம் அவருடைய உரைநடைக்கு இல்லை என்றே நினைக்கத் தோன்று கிறது. ஞானரதம் ஒன்றுமட்டும் இந் நிலைக்கு மாறுபட்டுள்ளது. நீளமான வாக்கியங்கள் இல்லாமல் மிகக் குறுகிய வாக்கியங்களிலேயே உரைநடையை அமைத்துள்ளார். கவிதையில் காண முடியாத அளவு அதிகமான வடசொற்கள் அவருடைய உரை நடையில் காட்சியளிக்கின்றன. மணிப்பிரவாள நட்ை என்று கூறக்கூடிய அளவிற்குப் பிற சொற்கள் கலந்து அமைக்கப்பெற்ற அந்தக் கட்டுரைகள் தம் கருத்தைக் கற்பார்க்கு அறிவுறுத்துகின்றனவே தவிர, வீறு நடை போட்வில்லை; நொண்டுகின்றன.