பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அ. அ. ச. ஞானசம்பந்தன்.

என்றாலும் 1920 வாக்கில் சோஷலிச சமுதாயத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை இன்று நம்முடைய மனத்தில் வியப்பை உண்டாக்கு கிறது. செல்வம்' என்ற தலைப்பில் வெளியாகி யுள்ள அந்தக் கட்டுரை எல்லோருடைய நாவிலும் சோஷலிசம் ஆட்படும் இற்றைநாளில் கூடப் புதுமையை விளைவிப்பதாய் அமைந்துள்ளது. 1917-இல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சிக்குப்பின் மூன்றே ஆண்டுகள் கழித்து- அந்தப் புரட்சியை ஓரளவு அறிந்த பிறகு- வன்முறையோடு கூடிய சோஷலிசம் பயன் அளிக்காது என்ற பேருண்மையை விளக்கிப் புதுவகையான சோஷலிச சமுதாயத்தை எழுதிச் செல்கிறார். "கொலையைக் கொலையால்தான் நிறுத்த முடியும். அநியாயம் செய்வோரை அநியாயத் தால்தான் அடக்கும்படி நேரிடுகிறது என்று பூரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே யொழிய அதை நீக்க வல்லது ஆகாது. அநியாயத்தை அநியாயம் விருத்தி பண்ணுமே யொழியக் குறைக் காது' என்று எழுதிச் செல்லுகின்ற பாரதியார் 'ரஷ்யாவிலும்கூட இப்பொழுது ஏற்பட்டிருக்கிற சோஷலிச ராஜ்யம் எக் காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை' என்ற ஒரு தீர்ப்பையும் சொல்லிவிட்டுப் போகிறார்.

இவ் உரைநடைப் பகுதி நீங்கலாக நெடுங்கதை யும், சிறுகதையும் பல எழுதியிருக்கிறார் கவிஞர். "நவ தந்திரக் கதைகள்', 'சந்திரிகையின் கதை' முதலியவை மிக அழகான படைப்புகள் என்றாலும், சிறுகதைகள், நெடுங்கதைகள் என்பவற்றிற்கு நாம்