பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ) அ. ச. ஞானசம்பந்தன்

கால தத்துவத்தின் எதிரொளியாய்- காலத்துக் குரிய தேவையின் எதிரொலியாய்க் கவிஞன் தோன்று: கின்றான் என்பர். அத்தகைய கவிஞன் தொன்னெறி யில் வேரூன்றி, புதுநெறி வகுக்கும் திறனுடையன் என்றும் கூறுவர். பாரதியாரின் கலைத்திறனை இந்நோக்கில் ஆராய்ந்து பார்த்ததன் விளைவே இச் சொற்பொழிவு.