பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு புதுவையில் பெரும் வணிகராம் கனகசபைக்குப் புதல்வராகத் தோன்றினார். இவர் இயற்பெயர் சுப்புரத்தினம் என்றாலும், 'பாரதிதாசன்" என்ற பெயரே நிலைத்து விட்டது. புரட்சிக் கவிஞர் என்ற அடைமொழி இவர் கவிதை எழுதத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் இவருக்குத் தரப்பெற்றது. இவரு டைய கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப் பெற்றுள்ளன. மேலும், இவர் குடும்ப விளக்கு என்ற குடிமக்கள் காப்பியம் ஒன்றும், பாண்டியன் பரிசு', "எதிர்பாராத முத்தம் போன்ற காப்பியத் துணுக்கு கள் சிலவும், பிசிராந்தையார் உள்ளிட்ட நாடகங்கள் பலவும் எழுதியுள்ளார். தேசியக் கவி பாரதியார் புதுவை சென்று தங்கியிருந்ததே பாரதிதாசனை வெளிக்கொணர்வதற்குரிய வாய்ப்பை நல்கியது. மற்றொரு வகையாகக் கூறவேண்டுமானால் பாரதி யால் பாரதிதாசனும், பாரதிதாசனால் பாரதியாரும்