பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அ. அ. ச. ஞானசம்பந்தன்

பயன் அடைந்தனர் என்றே சொல்லலாம். பாரதி தாசனிடம் இயல்பாக அமைந்திருந்த கவிதை இயற்றும் ஆற்றலை சூழ்நிலைவசத்தால் பாரதியாரே வெளிக்கொண்டு வந்தார் என்று அறிகிறோம்.

அற்றைச் சூழ்நிலையில் இத்தகைய ஒரு தூண்டுதல் இல்லாது போயிருப்பின் புரட்சிக் கவிஞரிடம் குடி கொண்டிருந்த பேராற்றல் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டிருக்கலாம் என்றாலும், அவ்வளவு இளம் வயதில் வெளிப்பட்டிருக்கக் காரணம் இல்லை. அப்படியேவெளிப் பட்டிருப்பினும் பழமை பாராட்டி வந்த தமிழ்ப் புலவர் உலகம்' அவரைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்க முன்வந்திராது.

பாரதிதாசனார் தமிழ் இலக்கியத்தில் பாரதி யாரைவிட ஆழ்ந்து பயின்றிருக்கின்றார். இவ்வாறு சொல்வதால் பாரதிக்குத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லையோ என்று யாரும் ஐயுற வேண்டா. கம்பன், வள்ளுவன் ஆகிய இருவரிலும் ஈடுபட்ட பாரதி, சங்கப் பாடல்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிய வில்லை. அதற்குரிய வாய்ப்புகளும் அவருக்கில்லை. இதன் எதிரர்க வடநாட்டில் சென்று வடமொழியை யும் வேத உபநிடதங்களையும் கற்று அவற்றுள் மூழ்கி விடும்படியான வாய்ப்புப் பாரதிக்குக் கிடைத்தது. பாரதிதாசனுக்கோவெனில் புதுவையை விட்டு வெளிச் செல்ல வாய்ப்பு ஏற்படாம்ையின், தமிழ் இலக்கியச் சுனையில் ஆழ்ந்து மூழ்கித் திளைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இருவரையும் திசை திருப்பி நேர் எதிர் எதிரான பாதைகளில் செலுத்தி விட்டது. கவிதை ஆற்றலிலும், உணர்ச்சிப் பெருக்கிலும், சொல்