பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 87

ஆட்சியிலும், ஓசை நயத்திலும், பொருள் ஆழத்திலும் இருவரும் பேராற்றல் படைத்தவர்கள் என்றாலும், இளமையில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருடைய ஆற்றலையும் வெவ்வேறு திசையில் திசை திருப்பி விட்டது என்பதில் ஐயமில்லை.

மேலைநாட்டுப் புலவர்களைப் பொறுத்தமட்டில் கூட ஐரோப்பா, இத்தாலி முதலிய இடங்களுக்குச் சென்று நேரிடையாக அவற்றில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் லார்டு பைரனின் கவிதைகள் பரந்து பட்ட ஒரு பண்பை அறிவிக்கின்றன. ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்கள் இத்தகைய வாய்ப்பை அதிகம் பெறாவிட்டாலும் பழைய கிரேக்க இலக்கியங்களை யும், கிரேக்க வரலாற்றையும், கிரேக்க புராண இதிகாசங்களையும் ஆர்வத்துடன் கற்றறிந்தமையின் அவர்களுடைய பாடல்களிலும் இப்பரந்த மனப் பான்மை இலங்கக் காண்கின்றோம்.

பாரதிதாசன் பிரெஞ்சு மொழி கற்றார்; மேலை நாடுகளுக்கோ அன்றி வடநாட்டிற்கோ சென்று வடமொழி முதலியவற்றிலும் பாரதி போலப் புலமை பெற்றிருப்பின் அவருடைய கவிதைகள் எந்தத் திசை நோக்கிச் சென்றிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதே சுவையுடையதாக இருக்கும். பாரதி வடமொழியை ஆழ்ந்து கற்றது போல் புரட்சிக் கவிஞரும் ஓரளவு பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தாரே, அப்படியிருக்க வெளி உலக அனுபவம் அவருக்குக் குறைந்து விட்டது என்று கூறுவது முறையா என்று சிந்திக்கத் தோன்றும். இந்த நிலையில் ஒன்றை மறவாமல் மனத்தில் பதித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள வர்கள் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம்