பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இ. அ. ச. ஞானசம்பந்தன்

கற்றது உண்மைதான். ஆனால், பெரும்பான்மை யானவர்கள் ஆங்கிலத்தைப் பிழைப்புக்கு வழி அல்லது இன்றியமையாத தேவையான ஒரு கருவி என்று கருதிக் கற்றார்களே தவிர, ஜான் ஸ்டுவர்ட் மில்லை யும், ரஸ்கினையும் அவர்கள் காட்டிய புது வழிக் காகவோ அல்லது அவர்கள் நூலில் உள்ள இலக்கிய கயம் காரணமாகவோ கற்கவில்லை என்பது தெளிவு. ஆங்கில மூலம் அரசியல் கற்றவர்களும் இந்த விதிக்கு விலக்கானவரல்லர். மேலும், ஆங்கில ஆட்சியினால் நாடு அடிமைப்பட்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருடைய மனத்திலும் ஓரளவு குறைந்த அளவிலாவது இருந்த காரணத்தால் அம் மொழியின் மாட்டு இலக்கிய நயம் கருதியோ வேறு காரணத் தாலோ பற்று உண்டாகவில்லை. அதன் எதிராகவிருப்பு வெறுப்பு அற்ற நிலையில்- இன்றியமையாத ஒரு கருவி என்ற கருத்திலேயே கற்குமாறு செய்தது.

அதேபோலப் பாரதிதாசனும் பிரெஞ்சு மொழி கற்றார் என்றால்- அதுவும் இளம் பிராயத்தில் அப் பள்ளியில் பயின்றார் என்றால்- அது ஆழ்ந்த மாறுதல் ஒன்றைக் கவிஞருடைய மனத்தில் செய் திருக்கும் என்று கூற முடியாது. இதன் எதிராகத் தமிழ்ப் புலமைத் தேர்வு பெற்ற அவர் 18ஆம் வயதிலேயே கல்லூரித் தமிழ் ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கிவிட்டார். -

பாரதிதாசனை நினைக்கும்பொழுதும் அவரோடு பழகும் பொழுதும் அவருடைய கவிதைகளைக் கற்கும் பொழுதும் அவர் ஓர் உணர்ச்சிப் பிண்டம் என்பதை அறிய முடியும். கவிஞன் என்றாலே அவன் உணர்ச்சிப்