பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் இ 31

இவ்வாறு கூறுவதால் புரட்சிக் கவிஞரின் பாடல் களுக்கோ அன்றி அவற்றின் சிறப்புக்கோ இழுக்கம் கூறுவதாக அன்பு கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டா. திறன் ஆய்வாளன் நடுநிலையோடு நோக்கும்போது இக் கவிஞர் தம் உணர்ச்சியை வெளியிடக் கையாண்ட முறை எது என்பதை எடுத்துக்காட்டவும் கடப்பாடு உடையவன் ஆவான். இங்ங்னம் வெளியிடுவது பாரதிதாசனுடைய தனிச் சிறப்பு ஆகும். உணவுப் பண்டங்களுள் இரு வேறு சுவையுடைய பொருள்கள் இருப்பதனால் ஒன்றைவிட ஒன்று உயர்வு என்றோ தாழ்வு என்றோ யாரும் கருதத் தேவையில்லை. அந்தந்தச் சுவை அந்தந்தப் பண்டத்திற்குத் தனிச்சிறப்பை நல்குகிறது. அதே போல உணர்ச்சியை அப்படியே கொட்டி நம்மையும் அதில் மூழ்கடித்துத் திளைக்குமாறு செய்தது புரட்சிக் கவிஞரின் தனிச் சிறப்பாகும்.

இது அவருடைய இயல்பு என்பதை அறிந்த பிறகு, இந்த இயல்புக்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு அவருடைய வரலாற்றைப் பார்க்கும்பொழுது, முன்னர்க் கூறியபடி அதிகம் வெளியே சென்று பிறரோடு பழகாத காரணத்தால்தான் இந்நிலை ஏற்பட்டிருக்குமோ என்று நினைக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு ஒப்பற்ற பண்பினர் புரட்சிக் கவிஞர். அவரால் ஏசப்படும். இனத்தவர் ஒருவருடன் ஒரு முறை கவிஞரைச் சென்று காண நேர்ந்தது. மூன்று மணி நேரம் உரையாடிய பின்னர் வந்திருந்தவர் யார் என்று அறிந்திருந்தும் தம் ஒப்பற்ற பண்புடைமையாலும்