பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இ. அ. ச. ஞானசம்பந்தன்

அன்பினாலும் வந்திருந்தவரைக் கவிஞர் கவர்ந்தே விட்டார். தனி மனிதனுடன் பழகும்பொழுதும் நண்பர்களுடன் பழகும்பொழுதும் இத்துணை அன்பும், பண்பும் காட்டுகின்ற கவிஞர், கவிதா மண்டலத்தில் நுழைந்தவுடன் உணர்ச்சியில் தம்மை மறந்து விடுகிறார். சுற்றுச் சூழ்நிலையை ஒரு சிறிதும் கவனியாமல் உணர்ச்சியில் மூழ்கி அந்த உண்ர்ச்சியை அப்படியே வெளியிடும் இயல்பு குழந்தைகளுடைய இயல்பாகும். புரட்சிக் கவிஞர் குழந்தை மனப் பான்மை கொண்டவர் என்பதையும் நாம் நன்கு அறிவோம். எனவே, மனத்தில் தோன்றும் வெறுப்பு விருப்புகளைத் தம் கவிதைகளில் அப்படியே கொட்டித் தீர்க்கிறார்.

உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்தாமல் வெளியிடுகின்ற இயல்பு உடையவர்களிடம் மற்றொரு குறையையும் க்ாண்டல் கூடும். எந்த நேர்த்தில் எந்த உணர்ச்சி மிகுதியாக இருக்கிறதோ அதை அப்படியே வெளியிடும் இயல்பு உடையவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிறிதோர் உணர்ச்சியில் ஆட்படும் பொழுது முன்னர்க் கூறியதை மறந்துவிட நேரிடும். உதாரணமாக ஒன்றைக் காணலாம்: "தமிழ் இயக்கம்' என்ற கவிதைத் தொகுப்பில் இருபத்து நான்கு பொருள்கள் பற்றிக் கவிதைகள் யாத்துள்ளார் கவிஞர் ஒன்பதாவது தொகுதியாகிய புலவர் என்ற பகுதியில் 44 ஆம் பாடலும், 97 ஆம் பாடலும் ஓர் உணர்ச்சியில் நின்று பாடப் பெற்றவையாகும்.

முதுமைபெறு சமயமெனும்

களர் கிலத்தில் கட்டதமிழ்ப்

பெருநூல் எல்லாம்