பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 83

இதுவரைக்கும் என்னபயன்

தந்ததென எண்ணுகையில் கான்கு கோடிப் பொதுவான தமிழரிலே

பொன்னான தமிழ் வெறுத்தார்

பெரும்பா லோராம் புதுநூற்கள் புதுக் கருத்தால்

பொது வகையால் தரவேண்டும்

புலவ ரெல்லாம்.

சமயமெனும் சூளையிலே

தமிழ்நட்டால் முளையாதென்

றறிந்தி ருந்தும் . சமயநூல் அல்லாது

வழியறியாத் தமிழ்ப்புலவர்

சமயம் பேசித் தமிழ் அழிப்பார் எனினும் அவர்

தமிழ் வளர்ப்போம் என்றுரைத்துத் . தமை வியப்பார் தமிழ் வளர்ச்சி தடைப்பட்டால்

தம்வளர்ச்சி உண்டென்றும் கினைப்பார் சில்லோர்.

தமிழ் இலக்கிய வரலாற்றை ஓரளவு அறிந்தவர் கள் கூட இக்கூற்றுச் சரியானதன்று என்பதை நன்கு உணர்தல் கூடும். சங்க இலக்கியங்கள் நீங்கலாகச் சிலப்பதிகாரம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் பாரதி பாடல் வரையில் தோன்றிய அத்துணை

LIr— 7