பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அ. ச. ஞானசம்பந்தன்

இலக்கியங்களும் சமயத்தின் அடிப்படையில் தோன்றி யவையே என்பதை மறத்தல் இயலாது. சங்க நூல். களுங்கூடக் கடவுள் கொள்கையைப் பேசத்தான் செய்கின்றன. ஆனால், அதனையடுத்துத் தோன்றிய இலக்கியங்களை ஒப்பு நோக்கும் பொழுது அவை சமயத்தைப் பற்றிக் குறைவாகப் பேசியுள்ளன, என்று கூறலாமே தவிரத் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையில் உள்ள தமிழ் நூல்களில் சமய அடிப்படை இல்லாத நூலைத் தேடவேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாடல்கள் உள்பட ஒன்றுமே இல்லை என்று தான் கூற நேரிடும். அவ்வாறிருக்கச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் ஈறாக அனைத்தையும் கரைத்துக் குடித்த புரட்சிக் கவிஞர், 'முதுமைபெரு சமயமெனும் களர் நிலத்தில் நட்ட தமிழ்ப் பெரு நூல் எல்லாம் இதுவரைக்கும் பயன் தரவில்லை என்று பாடுவாரேயானால், ஏதோ ஓர் உணர்ச்சியில் உந்தப் பெற்றுப் பாடப் பெற்றதே தவிர அவருடைய ஆழ்ந்த மனத்தின் அடிப்படையில் தோன்றிய கருத்தன்று என்பதை அறியமுடியும்.

இஃது அவருடைய ஆழ்ந்த கருத்தன்று என்று ஏன் கூறுகிறேன் என்றால், அதே நூலில் பன்னிரண் டாவது கவிதையாக அண்மந்துள்ள கோயிலார்’ என்ற தலைப்பில் 59வது பாடலாக அமைந்துள்ள தைக் காண்டல் வேண்டும்.

சொற்கோவின் கற்போற்றித்

திருஅகவல் செந்தமிழில்

இருக்கும் போது