பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தத்தளிக்கும் பாரத சமுதாயத்திற்கு வழி காட்டும் சொற்கள்! புதிய கோணங்கியைக் கொண்டு நமக்குப் புத்தி புகட்டு கிருர், நம்பிக்கையூட்டுகிருர் பாரதியார். "சாத்திரம் வளருது, சாதி குறையுது. நேத்திரம் திறக்குது, கியாயங் தெளியுது, பழைய பயித்தியம் படிலென்று தெரியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடி சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது." இந்தியா மேன்மையுற, நம்மிடையேயுள்ள குறைகள் நீங்க, மக்கள் rேமமுற்று வாழ வழிகாட்டும் பாரதியின் அரிய கருத்துக்களை-கவிதைகளை, வசனக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியிருப்பதோடு சிந்தனையைத் தூண்டும் கருத்தாழமுள்ள ஆராய்ச்சி போன்ற முன்னுரையும் எழுதியுள்ள தூரன் அவர் களுக்கு நம் நாடு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. தமிழர் மட்டும் இக் கருத்துக்களை உணர்ந்தால் போதாது. மற்ற இந்திய மொழிகளிலும் இந்நூல் வெளிவருவது சாலச் சிறந்தது. இந்த முயற்சியும் எடுக்கப்படும் என நம்புகிறேன்.