பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 யெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து உள்ளத்திலுள்ள குழப்பங்களும் துன்பங்களும் நீங்கி, ஸந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சையுடையவர்கள் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்வது அசாத்தியமன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்திய மாகும. அஃதெப்படி யென்ருல், தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்பவேண்டும். "இவற்றை யெல்லாம் நான் எனது உடைமையாக்கிக் கொள்வேன், இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்க மாட்டேன்’ என்று ஒவ்வொருவனும் உறுதிசெய்து கொள்ளவேண்டும். “தனது உள்ளத்தில் இன்னின்ன எண்ணங்களைத்தான் வளரவிடவேண்டும்; இன்னின்ன எண்ணங்களை வளர விடக் கூடாது' என்று நிச்சயிக்கும் அதிகாரம்-திறமை -ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக் கின்றது. இதை அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்களுண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்து கொண்டு, வெளியே பிடித்துத் தள்ளிலுைம் போகமாட் டோம் என்று பிடிவாதஞ் செய்யும். அங்ங்னம் சிறுமைக் குரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப்படுத்துமானல், நீ அவற்றை வெளியே தள்ளு வதில் நேராக வேலை செய்யவேண்டாம். நீ அதைத் தள்ளத் தள்ள அது அங்கேதானிருக்கும். அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாமுன வேருெரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக. அப்போது அந்த