பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. தைரியம் நமது முன்னேர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸ்மஸ் கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளை யெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானல், இவை யனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை யென்கிருேம். அந்தபாஷையில் தைரியம் என்பதோர் சொல்லுண்டு. தீரனுடைய இயற்கை தைரியம். தீரன் என்ற வார்த்தை யின் தாதுப் பொருளைக் கவனிப்போமால்ை அறிவுடைய வன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்த பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது. எனவே "தைரியம் என்ற சொல் அறிவுடைமை யென்றும் துணிவுடைமை யென்றும் இருவித அர்த்தங்கள் உடை யது. இங்ங்ணம் இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே சொல்லே வழங்குவது அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்ருகும். உலகத்தில் வேறு எந்த பாஷையிலும் மேற்கூடிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்த பாஷை யிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப் பட்டிருக்கிறது,