பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 மற்ருெரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிருர் போலும். 'டோக்கியோ மாணிச்சி என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது :-'அறிவில் ஜப்பான் பாரத தேசத்திற்குக் கடன் பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரீகம் பெருத காலத்தில், பாரத தேசம் அதில் உயர்ந்திருந்தது. பாரத ஞானம் பூ மண்டலம் முழுவதையும் தீண்டியிருக் கின்றது. ப்லாத்தோ'வுக்கு உபதேசம் பாரத தேசத்தி லிருந்து கிடைத்தது. ஸ்வேதன் போர்க், ஷாபன் ஹோவர் என்ற பிற்காலத்து ஞானிகளும் பாரத தேசத்தின் அறிவுக்கு வசப்பட்டார். பாரத நாகரீகம் நமக்குச் சீன, கொரியா வழியாக வந்தது. நாம் இந்தியாவின் கடனை திரும்பக்கொடுக்க வேண்டும். ரவீந்திரநாதரை நாம் மிகவும் கெளரவப்படுத்த வேண்டும்.' 'யோர்த்ரை' என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லு கிறது :-"உலக வாழ்க்கையும் கவிதையும் சுதி சேர்ந்து நிற்க வேண்டும் என்பது ரவீந்திரர் கொள்கை. ஜப்பான் பாரத நாட்டுக்கு மிகவும் அறிவுக் கடன் பட்டிருக்கிறது.' இவ்வாறு ரவீந்திரருடைய பேச்சு வரும்போது, ஜப்பானியப் பத்திரிகைகள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவுக் கடன்பட்டிருப்பதை நினைத்துக் கொள்ளுகின்றன. ரவீந்திரருடைய கீர்த்தி உலகத்தில் அதிகமாகப் பரவி ஏறக் குறைய நான்கு வருஷங்களாகவில்லை. இந்த நான்கு வருஷங்களுக்குள் ஜப்பான் தேசத்தில் ஸ்மஸ்கிருத இலக் கண புஸ்தகங்கள் எப்போதைக் காட்டிலும் அதிகமாக விலையாகின்றனவாம். பாரத தேசமே லோக குரு' என்பதை உலகத்தார் அங்கீகாரம் செய்வார்கள். நாம் போய் நினைப்பூட்ட வேண்டும்,