பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 உன்னை எப்போதும் பிரகிருதி செய்கையிலே புகுத்தி ஆட்டிக்கொண்டிருக்கிருன். உன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கவில்லை. நீ இஷ்டப்படுவதே மழை பெய்வதைப் போல் இயற்கையிலேயே விளையும் செய்கை. சித்தமே ஜடம்.” இரண்டாவது விஷயம்:-"நான் பிரிவில்லை என்று கண்டு தெய்வமே உள்ளதாகையால் அதற்கு சேவகமாக உலகத் தொழில்களை பிழையில்லாமல் செய்து கொண்டு வரவேண்டும். கடமையைத் தவிருவோன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமையுண்டு. பகவான் கர்மயோகி ஸ்ந்யாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளை கள் பொய்யில்லை. மற்ற மனிதர்கள் மண் கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்தவேண்டிய கடமை கள் உண்டு.” ‘கடமை செய்யாதவன் வயிறு பிழைப்பதே நடக் காது' என்று கிருஷ்ணன் அழுத்திச் சொல்லுகிரு.ர். "இவ்வுலகத்துச் செய்கைகளுக்கு நாம் பொறுப்பில்லை, என்று எல்லாச் செயல்களையும் ஈசனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டோர் சோம்பேறிகளாய் பிறருக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் வெறுமே பிறர் போடும் தண்டச் சோறு தின்று கொண்டிருக்கும் துறவு நிலையிலே போய்ச் சேரும்படி நேரிடும் என்று சில புத்திமான்கள் பயப்படு கிரு.ர்கள். 'ஆப்படிப் பயப்பட இடம் இல்லை என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டாகவே, நான் இந்த வார்த்தையை இத்தனை விஸ்தாரப்படுத்துகிறேன். "தெய்வமே துணை என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி