பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 சிறிதேனும் ஆசைப்படாமல் வர்த்தகம், கைத்தொழில், நூலாராய்ச்சி முதலிய மார்க்கங்களால் செல்வமும் கீர்த்தியும் பெற விரும்புகிருர்கள். அன்னிய ராஜாங் கத்தின் கீழிருக்கும் நம்மவர்களோ ராஜாங்கத்தார் கொடுக்கும் கடைத்தரமான உத்தியோகங்களிலே மிகவும் ஆவலுடையவர்களாய் இருக்கிருர்கள். இந்த விஷயத்தில் 'சுதேசமித்திரன்’ பத்திரிகையின் மனநிலைமை வெகு விசித்திரமாய் இருக்கிறது. ஸர்க்கார் உத்தியோகங்களை எவரும் விரும்பக்கூடாதென்றும், ஸர்க்காரின் உதவி யில்லாமல் பலவித பிரயத்தனங்கள் செய்து பிழைக்க முயலவேண்டுமென்றும் இப் பத்திரிகை பல முறை உபதேசிப்பதை கேட்டிருக்கிருேம். எனினும் கவர்ன் மெண்டார் நம்மவர்க்கு ஏதேனும் புதிய உத்தியோகங்கள் கொடுக்கப்போவதாக வதந்தி வரும் பகடித்தில் இந்தப் பத்திரிகைக்கு அளவிறந்த ஆனந்தம் பிறந்துவிடுகின்றது. முன்னுக்குப் பின் தமது ஸ்பையிலேயும் வைசிராய் ஸ்பையி லேயும் ஒவ்வொரு இந்தியரை நியமிக்க எண்ணியிருப்ப தாக நெடுநாளாய் ஒரு வதந்தி ஏற்பட்டு வருகிறது. அது மெய்யான வதந்தி என்று நினைப்பதற்கு யாதொரு பல மான ஆதாரத்தையும் காணவில்லை. என்ற போதிலும் மேற்கண்ட விஷயமாக 'சுதேசமித்திரன்' பத்திரிகை எத்தனை ஆனந்தத்துடன் எழுதுகிறது பாருங்கள் : "ஆகையால் லண்டன் நியமனம் நம்மவர்க்கு ஆவது சுலபம். இந்த லண்டன் நியமனம் மிஸ்டர் கோகலேயிற் காவது, மிஸ்டர் ஆர். ஸி. தத்துக்காவது ஆகுமென்ற வதந்தி இப்போது மாறி, பம்பாயில் நமது தேசாபிமானி களில் சிம்மத்தைப் போன்ற வல்லமையும் தைரியமும் கொண்டு எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருக்கும் ஸர் பிரெளஸிஸா மோவான்ஜி மேட்டா, நைட், சி. ஐ. இ-க்கு ஆகக் கூடுமென்று நம்பப்படுகிறது. அப்படியால்ை