பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஆத்ம ஞானத்திலும், ஈச்வர பக்தியிலும் உயர்ந்த பதவியை அடைந்திருக்க, நாமெல்லோரும் வறுமையை வளர்ப்பதே முக்கிய காரியமாக வைத்து நம்முடைய கடமைகளை முற்றிலும் ஒரத்தில் ஒதுக்கி, மிக்க தாழ்ந்த நிலைமையை அடைந்துவிட்டோம். இது என்ன கஷ்டம்! பரமார்த்திகளான ஆத்ம தத்துவ ஞானத்திலும், விவகார மான தேசத்தின் ஞானத்திலும் நம்முடைய பெரியோர் கள் நல்ல உயர்வே அடைந்திருந்தார்கள்; நாமோ தைரியமுமில்லாமல் நம்மை ஆண்டுவரும் அன்னிய தேசத் தார்களுக்கு செல்வத்தையும் தத்தம் செய்து பிரயோஜன மில்லாத பேடிகளாக எஜமானன் புசித்த இலையில் மீதியை தின்னும் அடிமைகளைப்போல் மகா தீனக்கதியை அடைந் திருக்கிருேம். நாம் இனிமேல் நல்ல கதியை அடைய நல்வழியைத் தேடவேண்டியது முக்கியமானதல்லவா? தற்காலத்தில் ஜனத் தலைவர்களென்று பேர் வைத்துக் கொண்டு உலாவும் உத்தியோகஸ்தர்கள் சட்டசபையிலும், நிர்வாக சபையிலும், மற்ற ராஜாங்க உத்தியோகங்களிலும் உயர்ந்த பதவி வேண்டுமென்று இவர்கள் கூறுகிரு.ர்கள். நம்முடைய சென்னை ராஜதானிக்கு கவர்னராக ஒரு இந்தியனே நியமித்தால் வெகு நலமாய்த்தான் இருக்கும். கவர்னர்களாகவும் கலெக்டர்களாகவும் நம்மை நியமித்து ஆங்கிலேயர்களுக்குத் தரும் சம்பளங்களை நமக்குக் கொடுத்தால் அதைவிட வேண்டியது நமக்கொன்று மில்லைதான். நமக்கே ராஜ்ஜியத்தைத் திருப்பி கொடுத்து விட்டு 'இந்தியர்களே இனிமேல் ராஜ்யத்தை ஆளலாம் , நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பிப்போகிருேம்' என்று சொல்லிப் போய்விட்டால் இவ்வாங்கிலேயர்களின் தர்ம சிந்தை வெகு புகழத்தகுந்ததாயிருக்கும். ஆனல் அவர்கள் அப்படிச் செய்வார்களா? வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்தி