பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நம்முடைய நாசத்தை விளக்கும். இனிமேல் நாமே நம்முடைய நல்வழியைத் தேடவேண்டும்!" என்று விண்ணப்ப்த்தையனுப்புவது வெகு சிரேஷ்டமான வழியா கும். நம்முடைய ஜனத் தலைவர்கள் தங்களுக்கு உயர்ந்த சம்பளமும் உத்தியோகமும் கொடுத்துவிட்டால் இந்தியா முழுவதும் நற்கதியடைந்துவிடுமென்று பாசாங்கு செய் கிருர்கள். கவர்மெண்டு உத்தியோகங்களில் அவர்களுக்கு உயர்ந்த உத்தியோகங்கள் கொடுத்தல் இந்தியர்களுக்கு பொருத்தமென்று இவர்கள் வெகுகாலமாய் சொல்லி வருகின்ருர்கள். இ வ. ர் க ளே மற்ற வெகுதாழ்ந்த சம்பளத்தைப் பேறுகிற கணக்கர்களின் நிலைமையைப்பற்றி பேசுகிறது கிடையாது. அதைப் பற்றிப் பேசினல் அந்த நிபுணர்கள் அசட்டை செய்துவிடுகிருர்கள். 15 ரூபாய் சம்பளத்தைப் பெறும் கணக்கர்கள் கவர்ன்மெண்டு ஆபீஸ் களில் ஆயிரக்கணக்கானவர்களை அடுத்துப் பூஜிக்கிருர் களே அனேகர். 15 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு ஒரு மனிதன் 5 பேர்களடங்கிய ஒரு சம்சாரத்தை எப்படித்தான் காப் பாற்றுவான். ஆகையால் தங்களின் சுய நன்மையும் சுகத் தையும் லாபத்தையும் கவனியாமல் கஷ்டப்படும் ஜனங் களின் நன்மையைத் தேடுகிறவன்தான் ஜனங்களால் பூஜிக்கப்படுபவன். ஆகையால் நம்முடைய தலைவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளும் கவர்ன்மென்டா ரைப் பிச்சை கேளாமல் ஜனங்களையடுத்து அவர்களின் உதவியைக்கொண்டு நற்கதியை அடைவார்களென்ருல் நம்முடைய ராஜ்ஜியம் சீக்கிரத்தில் ஒரு நல்ல நிலைமையில் வந்துவிடும். ஆனல் செவிடர்கள்போல் ஆங்கிலேயர் களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம் முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்ட மானது. நன் நி-பாரதி தரிசனம்-இரண்டாம் பாகம்.