பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 4. ஸ்ர்க்காரிலே ஸ்ர் என்றும் உர் என்றும் புட்டம் பெற்றுத் திரிந்தவர்களையெல்லாம் ஜனங்கள் மதிப்புடன் நடத்திய காலம் போய் இப்போது அவர்களைப் பகிரங்க ஸ்தானங்களிலே பேச வொட்டாத நிலுைமைக்குத், கொண்டு வந்து விட்டார்கள். 5. இங்கிலீஷிலே பேசக்கூடாது. தமிழ்நாட்டிலே ஜனத் தலைவர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு வருவோர் பொது விஷயங்களைப்பற்றித் தமிழிலேயே பேசவேண்டும் என்று ஜனங்கள் வற்புறுதினர்கள். 6. ஸர் வி. சி. தேசிகாச்சாரிக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். சென்னை மாணக்கர்களிலே பெரும்பாலோர் வெளியூருக்குச் சென்றிருந்தபடியால் பழைய கட்சியார் இம் மட்டோடு பிழைத்தார்கள். ஒரு வாரத்திற்குமுன் இந்தப் பொதுக்கூட்டம் நடந்திருக்குமானல், நமது மயிலாப்பூர் நண்பர்களின் ஸ்திதி இன்னும் வேடிக்கையாக முடிந்திருக்கும். லால லஜபதிராய் தீபாந்திரத்துக்குப் போவதைப்பற்றி ஜனங்கள் மனது கொதித்துக் கொண்டிருக்கும் போதுகூட இவர்கள் சர்க்காரை ஸஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்வதுதான் சரியான பாதையென்று நினைப்பது வினோதமாயிருக்கிறது. இவர்கள் என்ன நினைத்தாலும் சரியே. இனி இதைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கூறத் துணியமாட்டார்கள் என்று நேற்றே தெளிவாய்விட்டது.