பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. பால பாரத சங்கம்-முதலாவது பிரகடனம் பத்தாம் அவதாரம் 1907 to strfé; 30. 'ஹே பாரதா! எப்போதெப்போது தங்கத்திற்கு பங்கமுண்டாகி அதர்மம் தலைதுாக்கி நிற்கிறதோ அப் போதெல்லாம் நான் தோன்றுகிறேன். ஸாதுக்களைக் காக்கும் பொருட்டாகவும், தீங்கு செய்வோர்களை நாசம் செய்யும் பொருட்டாகவும், தர்மத்தை நன்கு ஸ்தாபனம் செய்யும் பொருட்டாகவும் நான் யுகந்தோறும் வந்து பிறக்கிறேன்' என்று கிருஷ்ண பகவான் பகவத் கீதையிலே நமது பூர்விகராகிய அர்ஜூனனுக்கு வாக்களித்திருக்கிரு.ர். ஆகையால் தற்காலத்தில் இந்தியர்கள் என்று வழங்கப்பெறும் ஹே பாரதர்களே! இப்போது பத்தாம் அவதாரம் தோன்றுவதற்குரிய காலம் வந்துவிட்டதா இல்லையா என்பதைப்பற்றி சிறிது ஆலோசியுங்கள். இந்தியாவிலே பிறந்து வாழும் 30 கோடி ஜனங்களை சுமார் ஒரு லக்ஷம் தொகையுள்ள பரங்கிக்கார ஜனங்கள் வந்து எவ்விதமாகவோ மாயைகள் செய்து அரசாட்சி செய்கிரு.ர்கள். நம்மவர் வாயில்லாமல் பூச்சிகள்போல் அந்த அரசாட்சி இன்ன மாதிரியாக நடத்தவேண்டு மென்று வற்புறுத்துவதற்குக்கூட சக்தியில்லாதவர்களா யிருக்கிருர்கள். 30 கோடி ஜனங்கள் தீர்வை செலுத்து கிரு.ர்கள். அந்தத் தீர்வை மொத்தத்தை இன்னவித மாகச் செலவிட வேண்டுமென்று நியமனம் செய்யக்கூட இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இங்கிலீஷ்காரர் தம்முடைய சொந்த (அனு) கூலங்களை கவனித்து எவ்வித மான படிப்புச் சொல்லிக் கொடுக்கிருர்களோ அந்த விதமான படிப்புத்தான் படிக்கவேண்டும். நாமாக நமது சொந்த நன்மைகளைக் கவனித்து மற்ற சுதந்திர தேசங் гит, шт.—9