பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவிர புத்தி செலுத்துகிருர்கள். ஆனல் நமக்குள் ஜாதிபேதமிருக் கிறது என்ருல் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை, உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகம், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்துவரும் மஹா ப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாகப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும். இது வெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்ருல், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்கு கிருர்கள். தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிருர்கள். சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்குகூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை. சென்ற வெள்ளிக்கிழமையன்றுகூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிமிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்பு, கடலூரில் கூடிய மாஹாண சபையில் 'வந்தே மாதரம்” பாட்டுக் கூடப் பாடவில்லையென்று கேள்விப்பட்டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபைகூட அப்படி நடந்திராது. இது நிற்க. மேற்படி சபையில் வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தைகளின் ஸாரம் பின்வருமாறு: 1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்கவேண்டும். 2. இந்தியாவுக்குத் தன்னட்சி கொடுக்கவேண்டும் 3. இயன்றவரை, இந்தியா முழுவதையும், பாஷை களுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்கவேண்டும்.