148 5. விவாகம் முதலிய சோபன காலங்களில் ஹிந்துக் கள் மஹம்மதியரையும், மஹம்மதியர் ஹிந்துக் களையும் அழைத்து உபசாரங்கள் செய்து, தனியாக விருந்துகள் செய்து வைக்கவேண்டும். ஹிந்துக்களுக்குள்ளே ஜாதிக் கட்டுகள் இருப் பதைப்பற்றி மஹம்மதியர் அருவருப்புக்கொள்ளக் கூடாது. இங்ங்ணம் பூரீ நாராயண சாஸ்திரி சொல்வதை நாட்டிலுள்ள ஹிந்து மஹம்மதியத் த லை வ ர் க ள் கவனித்து அந்தந்த இடங்களிலேயே இயன்றவரை இரு திறத்தாருக்குள்ளேயும் ஸ்ஹோதர உணர்ச்சி மேன்மேலும் பெருகி வருவதற்கு வேலை செய்தால் தேசத்துக்கு அள விறந்த நன்மையுண்டாகும். 60. ஸ்வராஜ்யம் 5 அக்டோபர், 1918 சென்னை 'ஹிந்து பத்திரிகையின் லண்டன் நிருபர் எழுதிய கடிதமொன்றில் 'அமெரிக்காவும், ஐர்லாந்தும், இந்தியாவும்' என்ற மகுடத்தின் கீழே ஒரு குறிப்பெழுதி யிருக்கிருர். அதில் அமெரிக்கா ஸ்வாதீனமடைந்த திரு நாளாகிய ஜூலை நாலாந்தேதி கொண்டாட்டங்கள் ஆங்கிலேயர்களாலேயே இங்கிலாந்தில் மிகவும் விமரிசை யாகக் கொண்டாடப்பட்ட செய்தியைக் குறித்துப் பேசு கிரு.ர். (இங்கிலீஷ் ராஜ்யத்தை எதிர்த்துப் போர்புரிந்து வெற்றி பெற்று (யுனைடெட் ஸ்டேட்ஸ்) அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1776ஆம் வருஷம் ஜூலை மாஸம் நாலாந்தேதி யன்று விடுதலைக் கொடி நாட்டின மேற்படி லண்டன் நிருபர் எழுதுகிரு.ர்.
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/152
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை