பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İð: ஒருவிதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிருf கள். இருந்தாலும், நாலடியாரில் சொல்லியபடி, "அட்டுற யார்மாட்டும் கில்லாது செல்வம் சகடக்கால் போலவரும்" லக்ஷ்மீதேவி எந்த இடத்திலும், ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும் அதலுைண்டான பெருமையும், ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவுபடும்போது, உட் பொருமையும் மாற்சரியமும் வெளிப்பட்டுத் தலைதுாக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்ருக அறிவார்கள். இந்துக்களின் சிறப்பு ஆல்ை, இவ்விஷயத்திலேகூட, மற்ற தேசத்தாரைக் காட்டிலும் ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகின்றது. ஏனென்ருல் ஹிந்துக்களிடம் தெய்வ பக்தி என்ற சிறந்த குணம், மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகமென்பதை மேற்குப் பக்கத்துப் பண்டித ரிலே கூடப் பகடிபாதமற்ற பல யோக்கியர் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிருர்கள். தெய்வ பக்தியினல் ஜீவதயை உண்டாகிறது. "எல்லாரும் இன்புற்றிருக்க கினைப்பதுவே யல்லாமல் வேருென்றறியேன் பராபரமே” என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினர். சென்ற கார்த்திகை மாதம், புயற்காற்றடிப்பதைப் பற்றி, தென்ற்ைகாடு ஜில்லாவைச் சோதனை செய்த ஸர்க்கார் அதிகாரியான ஒர் ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில், ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதயை