பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16] வேகத்துடன் கைகளே உதறினன். கைத்தளைகள் படி, ரென்று நீங்கின. உடைவாளையெடுத்தான். "செய். செய், செய்" என்று மறுபடி சத்தம் கேட்டது. பாம்பு கடித்த கால்விரலைப் பளிச்சென்று வெட்டி எறிந்து விட்டான். குரு, குரு, குரு என்ற சத்தம் மீண்டும் கேட்டது. உடம்பிலிருந்த துணியைக் கிழித்து, மண்ணிலே புரட்டி அதிக ரத்தம் கால் விரலிலிருந்து விழாதபடி சுற்றிக் கொண்டான். மறுபடியும் செய்’ என்ற தொனி பிறந்தது. தளைகளை வாளால் வெட்டிவிட்டான். அப்போது அவனுடைய சரீரத்திலே ம றுபடியும் ஆயாஸ் முண்டாயிற்று. அப்படியே சோர்ந்து விழுந்தான். ஜ்வரம் வந்துவிட்டது. மரணதாகமுண்டாயிற்று. "ஐயோ தாகம் பொறுக்கவில்லையே, என்ன செய் வேன்?’ என்று புலம்பினன். "மந்திரத்தை ஜபம் பண்ணு' என்றது அசரீரி. 'கரோமி,கரோமி, கரோமி என்று தாய் மந்திரத்தை மறுபடி ஜபித்தான். 'செய்” என்று கட்டளை பிறந்தது. "என்ன செய்வது?’ என்றேங்கினன். "சோர்வடையாதே, செய்கை செய்' என்றது தொணி. "என்ன செய்வது?" என்று பின்னெரு முறை கேட்டான். 'கல்லிலே முட்டு" என்று கட்டளை பிறந்தது.