பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 (பார்லிமெண்டு) மெம்பராக இருப்பவர். இவர் ஆதியில் பர்மாவிலே உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அபின் ஏலத்தைக் குறைக்கவேண்டு மென்ற விஷயத்தைப் பற்றி மிஸ்டர் ஸ்மிட்டன் லார்டு கர்ளினுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டார். அதற்கு, லார்டு கர்ஸன் தமது கையாலேயே எழுதிய மறுமொழி யில் பின்வருமாறு கூறினர் :- 'நீர்தாம் ஒழுங்கையும் மனச்சாகதியையும் அதிகமாகக் கவனிக்கின்றீர். ஆகை யினால், நீர் ஒர் பிரிட்டிஷ் மாகாணத்தில் உத்தியோகம் பார்க்க உதவமாட்டீர்" என எழுதியிருக்கிருர். எனவே தர்ம ஒழுங்குள்ளவனும் மனச்சாகழிப்படி நடப்போனும் பிரிட்டிஷ் ஆட்சியில் உத்தியோகம் பார்க்கத் தகுதி யில்லாதவனென்று லார்டு கர்ஸன் எண்ணியிருந்ததாகத் தெளிவுபடுகிறது. வெளிக்கு, பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் எல்லாம் மகாதர்மப் பிரியர்களென்றும், தேவ புருஷர் களென்றும் பேசிக் கொண்டிருந்த லார்டு கர்ஸன் தமது அந்தரங்கத்திலே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உத்தியோகம் பார்ப்பவன் சிறிதேனும் தர்ம நெறி அறியாத நீச்சன யிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டிருக்கிரு.ர். மிஸ்டர் மார்லி இங்கிலாந்திற் கென்று ஒர் மனச்சாகதியும், இந்தியாவுக் கென்று மற்ற மனச்சாகதியும் வைத்துக் கொண்டிருப்பது போல, லார்டு கர்ஸனும் பிரிட்டிஷ் மாகாணங்களின் அதிகாரங்களைப் பற்றி வெளியில் சொல் வதற்கோர் அபிப்பிராயமும் மனதுக்குள்ளே மற்ற அபிப் பிராயமும் வைத்துக் கொண்டிருக்கிரு.ர். இப்படி ராrசத்தனமான கொள்கை வைத்திருந்த இந்த மனிதன் இஷ்டப்படி ஆளும்படியாய் முப்பதுகோடி ஜனங்கள் இவருக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நினைக்கும்போதே மனம் பதறுகிறது. இவரு ат, ат.—11