பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மொழி இவ்வாறு பேசிவிட்டு நான்காம் நாளில் கவிஞனின் சினமொழி கேட்ட குயில் கூறுகின்ற சொற்கள் மேலும் சிந்தனைக்குரியனவாய் அமைகின்றன. குயிலின் பேச்சில் வரும் ஒரு பகுதியைப் பார்ப்போம். "தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னாகும்? ஆவற் பொருளே! அரசே!என் ஆரியரே!" ஆகவே ஒப்பற்றவர் என்ற பொருளே எங்கும் தொனிக்கின்றது. பாரதியார் கொண்டுள்ள பொதுநோக்காலும் இவருடைய கருத்தை அறிந்துகொள்ளலாம். நிற்க, பாப்பாப்பாட்டு ஒரு சிறந்த வைரமணி போன்றது என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். பாரதியும் தமிழகமும் என்ற தொகுப்பிலே தமிழகத்தைப் பற்றிய வரிகளை மட்டும் இப்பாடலிலிருந்து எடுத்துக் காட்டினேன். ஆனால் எவ்வாறு தமிழகத்தையும் பாரத தேசத்தின் மற்றப் பகுதிகளையும் ஒருங்கிணைத்துப் பாடுகின்றார் என்பதற்குப் பாப்பாப்பாட்டு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதைப் பார்ப்போம். "தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா' என்று சொல்லி வாய் மூடுமுன், "அமிழ்தில் இனியதடி பாப்பா-நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா' என்று முடிக்கிறார். "சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்று சொல்லிய அதே மூச்சில்,