பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வருங்காலப் பெருமைகளைக் காட்டும்போதே அன்றிருந்த குறைபாடுகளையும் இடித்துக் காண்பிக்காமல் இருந்த தில்லை. பாரத தேசத்தின் பெருமைகளைக் கூறித் தலை நிமிரச் செய்வார். அதே வேளையில் நமக்குள் மலிந்து கிடக்கும் குறைகளின்மீது இடியேறு போலப் பாய்வார். எள்ளி நகையாடியும், இகழ்ந்து கூறியும் மக்களைத் திருத்த முயல்வார். "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த கிலைகெட்ட மனிதரை கினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே" என்று கோழைகளாக அடிமை இருளிலே வகையறியாது கிடந்த இந்திய மக்களைப் பார்த்து இவ்வாறு பேசுகிரு.ர். இதுமட்டுமா? இந்த மக்களின் பயங்கொள்ளித்தனத்தை மேலும் அம்பலப்படுத்துகிருர் : "சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் துப்பாக்கி கொண்டொருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பால் எவனே செல்வான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்" இவ்வாறு கோழைத்தனத்தை விடும்படி எள்ளி நகையாடி, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்துளோரெலாம் எதிர்த்துகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப ിൽ8ാച്ചേ"