பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í 8 என்று கர்ஜித்து அச்சத்தை ஒட்டுகிருர். அத்துடன் பாரதியார் நின்றுவிடவில்லை. நெஞ்சில் உரம் இல்லாதவர்களை அவர் இடித்துப் பேசுகிரு.ர். பழித்துப் பேசியும் அறிவுறுத்த அவர் முனைகின்ருர். "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ-கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடீ-கிளியே ஊமைச் சனங்களடீ" அன்றிருந்த ஊமைச் சனங்களை இவ்வாறெல்லாம் தட்டி எழுப்பப் பாரதியார் முயன்றிருக்கிரு.ர். இந்தியாவை ஆண்ட அந்நியரின் வாய்ப் பேச்சாகவும் இந்திய மக்களை இடித்துக் காண்பிப்பதில் அவர் தயங்கிய தில்லை. ஆங்கிலேய அதிகாரி கூறியதாக வரும் பாட்டைப் பாருங்கள். "தொண்டு செய்யும் அடிமை-உனக்குச் சுதந்திர கினைவோடா? பண்டு கண்டதுண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ? ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்-கண்முன் நிற்கொளுது போடா! அச்சம் நீங்கினயோ?-அடிமை ஆண்மை தாங்கிளுயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுதல் ஒழித்தாயோ?”