பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I9 என்று இவ்வாறு நம்மிடையே அன்றிருந்த குறைகளே யெல்லாம் எடுத்துக் காட்டுகிருர். (அக்குறைகளில் பல இன்னும் சுதந்திர இந்தியாவில் இருப்பதையும் வருத்தத்தோடு எடுத்துக் காட்டவேண்டியிருக்கிறது.) பாரதியார் தம்முடைய கவிதைகளையும் கட்டுரை களையும் எழுதிய காலம் 1920ஆம் ஆண்டிற்கும் முற் பட்டது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். அன்று விடுதலைப் போராட்டம் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை. திலகர் அதற்கு ஒரளவு வேகம் கொடுத்தார். வங்காளத்திலே விபின சந்திரபாலர், தமிழ் நாட்டிலே கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் மூவரும் திலகர் வழியிலே சுதந்திரக் கிளர்ச்சிக்கு விதை விதைத்தனர். வேறு பல பகுதிகளிலும் லஜபத்ராய் போன்றவர்கள் சுதந்திரப் பயிரை வளர்ப்பதில் முனைந்திருந்தார்கள். இருந்தாலும் காந்தி அடிகள் இதில் ஈடுபடும் வரையில் அவ்வளவு வேகமாகச் சுதந்திரப் போர் நடந்ததாகக் கூறமுடியாது. திலகரும் அவரைப் பின் பற்றிய மற்ற தலைவரும் மேற்கொண்ட வழி வேறு; அண்ணல் காந்தி அடிகளின் வழி வேறு. தாம் வகுத்துக்கொண்ட வழியைவிட அண்ணலின் வழியே உகந்தது என்பதைப் பாரதியார் தமது நுட்பமான அறிவால் உணர்ந்துகொண்டதைக் காட்டவே, "வாழ்கரீ எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்