பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இந்த உணர்ச்சியை மட்டும் எடுத்துக் காண்பித்து இம் முன்னுரையை முடித்துக் கொள்கின்றேன். "இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே யந்தி ரங்கள் வகுத்திடு வீரே கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே கடலில் மூழ்கிகன் முத்தெடுப் பீரே அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயி ரந்தொழில் செய்திடு வீரே" என்று அடிமை வாழ்வில் சோர்ந்து கிடக்கும் மக்களைக் கூவி அழைக்கிரு.ர். சுதந்திரம் வந்துவிட்டது என்று முழங்கிப் பள்ளுப் பாடுகின்ருர், புதிய பாரதத்தில் இருக்கத் தகுதியற்றவர்களை போ போ என்று வெறுத்துரைக்கிரு.ர். தகுகியுள்ளவர்களே வா வா வா என்று அன்புடன் வரவேற்கிரு.ர். இப்படிச் சொன்னல் போதாது. பாரதியாருடைய கவிதையாகவே பார்ப்போம் : "வலிமை யற்ற தோளினய் போ போ போ மார்பிலே ஒடுங்கிய்ை போ போ போ பொலிவிலா முகத்தினய் போ போ போ பொறியிழந்த விழியினய் போ போ போ 岑 率 岑 ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தருமமொன் றியற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினல் வணங்குவாய் போ போபோ"