பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாரத நாடு பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு. சரணங்கள் ஞானத்தி லேபர மோனத்தி லே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையிலேஉயர் நாடு-இந்தப் தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதிலேஉயர் நாடு-இந்தப் நன்மையிலேஉடல் வன்மையிலே-செல்வப் பன்மையி லேமறத் தன்மையிலே பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு-இந்தப் ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினி லேஉயர் நாடு-இந்தப் வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத் தண்மையி லேமதி நுண்மையிலே உண்மையிலேதவ ருத புலவர் உணர்வினி லேஉயர் நாடு-இந்தப் யாகத்தி லேதவ வேகத்திலே-தனி யோகத்தி லேபல போகத்திலே ஆகத்தி லேதெய்வ பக்திகொண்டார்தம் அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்) (பாருக்) (பாருக்) (பாருக்) (பாருக்) (பாருக்)