பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 43 (எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்) அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம் ஆணிமுத்துப் போன்றமணி மொழிகளாலே பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள், பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்: இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம் என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள் மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. (ஆசிரியப்பா) வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! கற்றவராலே உலகுகாப் புற்றது: உற்றதிங் கிந்நாள்: உலகினுக் கெல்லாம் இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர், குற்றமே தமது மகுடமாக் கொண்டோர். மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்; பற்றை அரசர் பழிபடு படையுடன் சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார் இற்றைநாள் பாரி லுள்ள பலநாட் டினர்க்கும் பாரத நாடு புதுநெறி பழக்கல் உற்றதிங் கிந்நாள்: உலகெலாம் புகழ இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும் கiந்திர னகிய ரவீந்திர நாதன் சொற்றது கேளீர்! புவிமிசை யின்று மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன், தர்மமே உருவாம். மோஹன தாஸ் கரம்சந்திர காந்தி யென் றுரைத்தான். அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே 10 15 20