பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. சி. சுப்பிரமணியம், M. P. அவர்கள் பெரியசாமித்துாரனும் நானும் நெடுங்கால நண்பர்கள். சென்னை பிரசிடென்சி காலேஜில் ஒரே சமயத்தில் மாணவர் களாக இருந்தோம். நான் 1926-ல் கல்லூரியில் சேர்ந்தேன். தூரன் 1927-ல் சேர்ந்தார். விக்டோரியா மாணவர் விடுதியில் சில வருஷங்கள் வாசம் செய்தோம். இக்காலத்தில்தான் எங்கள் இருவருக்கும் அறிமுகமாயிற்று. அது நட்பாக முற்றியது. இந்த உறவு ஒரு தனிப்பட்ட முறையில் ஏற்பட்டதல்ல. தேசிய இயக்க அடிப்படையில் அமைந்தது. மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் சுதந்திர இயக்கம் மக்களின் இதயத்தைக் கவர்ந்து கொண்டிருந்த காலம் அது. மாணவர் இந்த இயக்கத்தில் பலவகைகளில் கலந்து கொண்டனர். அதற்கு அன்றைய அரசு பல முட்டுக்கட்டைகள், கட்டுப்பாடு கள் ஏற்படுத்தி உணர்ச்சி வெள்ளத்தைத் தடுக்க முயற்சி செய்துவந்தது. துாரன் போன்ற தேசிய நோக்குக்கொண்ட பல மாணவர் கள் ஒன்றுசேர்ந்து வனமலர்ச்சங்கம் என்ற ஒரு குழுவை ஏற்படுத்தினேம். அக்குழுவில் பங்குகொண்ட பலர் சுதந்திர இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெரும் பதவிகளை ஏற்று நாட்டுக்குப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர். இந்தக்