பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 49 பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னட்டார். துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னேரும், 10. சேர்ந்ததைக் காப்பது காணிர்-அவர் 1. சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) 14. பாரத ஜனங்களின் தற்கால கிலைமை கொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே: வஞ்சனப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில்என் பார்;அந்தக் குளத்தில்என்பார்: துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார்எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு) மந்திர வாதி என்பார்-சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்: யந்திர சூனி யங்கள்-இன்னும் எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே-ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசியல்-இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார் (நெஞ்சு)