பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 4. 54 சரணங்கள் மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?-புலனில் வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு: கணியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின்றித்தரு நாடு-இது கணக்கின்றித்தரு நாடு-நித்தநித்தம் கணக்கின்றித்தரு நாடு-வாழ்க! இனியொரு விதிசெய்வோம்-அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! "எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன் என்றுரைத்தான் கண்ணபெருமான்; எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க! (பாரத) (பாரத) (பாரத) (பாரத)