பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 2. 3. 5. 56 போற்றிவான் செல்வீ! புரையிலை, நிகரிலை! இனியநீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை! சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை! இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை! தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே) 18. ஜாதீய கீதம் (புதிய மொழி பெயர்ப்பு) நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி, கோடி புயத்துணை கொற்றமார் நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும் "கூடு திண்மை குறைந்தனை' என்பதென்? ஆற்றலின் மிகுந்தன. அரும்பதங் கூட்டுவை, மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே) அறிவுநீ தருமம்நீ உள்ளம்நீ, அதனிடை மருமம்நீ; உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ; தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ, ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம் தேவிஇங் குனதே. (வந்தே) பத்துப் படைகொளும் பார்வதி தேவியும் கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும் அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)