பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தாளில் விழுந்தபயங் கேட்டேன்-அது தாரா யெனிலுயிரைத் தீராய்-துன்பம் நீளில் உயிர்தரிக்க மாட்டேன்-கரு நீலியென் னியல்பறி யாயோ? தேடிச் சோறுநிதந் தின்று-பல சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து-நரை கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்-என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதியவுயி ராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து-மதி தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். தோளை வலியுடைய தாக்கி-உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு மாரு வுடலுறுதி தந்து-சுடர் நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து-மத வேளை வெல்லுமுறை கூறித்-தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும். எண்ணுங் காரியங்க ளெல்லாம்-வெற்றி யேறப் புரிந்தருளல் வேண்டும்-தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும்-அதிற் பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவை