பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த் தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி, "புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால், அறத்தினைப் பிரிந்த சுயோதன தியரைச் செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்ருய், உண்மையை அறியாய்; உறவையே கருதிப் பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்ருய், வஞ்சகர், தீயர் மனிதரை வருத்துவோர் நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்: இன்னேர் தம்மொடு பிறந்த சகோதர ராயினும், வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம். ஆரிய நீதிநீ அறிகிலே போலும்! பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை அரும்புகழ் தேய்ப்பதும் அரிையத் தகைத்தும் பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! ஈடிலாப் புகழினய் எழுகவோ எழுக!" என்றுமெய்ஞ் ஞானம்நம் இறைவர் கூறக் குன்றெனும் வயிரக் கொற்றிவான் புயத்தோன் அறமே பெரிதென அறிந்திடு மனத்தனய் மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன். விசயனன் றிருந்த வியன் புகழ் நாட்டில் இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், தேரில்இந் நாட்டினர். செறிவுடை உறவினர்: நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர் செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம், 160 165 170 I75 180 185