பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 2. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தியாவில் இல்லையே! வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமான மாக வாழ்வமே! (விடுதலை) 8. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம், வைய வாழ்வு தன்னில் எந்த வகையி னும்ந மக்குளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநி கர்சமான மாக வாழ்வம் இந்த நாட்டிலே! (விடுதலை) 37. சுதந்திரப் பள்ளு (பள்ளர் களியாட்டம்) பல்லவி ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடு) சரணங்கள் 1. பார்ப்பான ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)