பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 5. 85 எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு: சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே-இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஒதுவோமே. (ஆடு) எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே-கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.வீ.ணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம், விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஒய மாட்டோம். (ஆடு) நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்-இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப் பூமியில் எவர்க்கும்.இனி அடிமை செய்யோம்-பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)