பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 "பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே பார்மிசை யேதொரு நூல்.இது போலே" என்று கூறி மகிழ்கிரு.ர். தமிழையும் சமஸ்கிருதத்தையும் இரண்டு கண்களைப்போலப் பாவிக்கிருர் கவிஞர். இந்தியர்கள் அனைவரையும் ஒரே பாரத ஜாதி என ஒன்றுபடுத்துகிருர் பாரதியார். கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாகவே மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறித் தலைமுறை தலைமுறை'யாக இங்கு வாழ்பவர்கள் எல்லாம் நமது ஜனக்கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றனர். ஆரிய சம்பத்தைப்பற்றிப் பாரதியார் குறிப்பிடுவதை இக் காலத்தில் இளைஞர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். "நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள். நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளளிதாசர் செய்திருக்கும் ர | ம | ய ண ம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி-இவை யனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோவில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக் கோயில், ஆக்ரா விலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்இவை அனைத்துக்கும் புதுப்பெயர் ஆர்ய லம்பத்து, எனவே ஆர்ய லம்பத்தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரிகம். இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்து விட்டால் இந்த 'ஜாதியைச் செல் அரித்துவிடும்.’’ எவ்வளவு அரிய சொற்கள். அரிய் கருத்துக்கள்! இக்காலத்தில் தடம்புரண்டு எங்கு செல்லுகிருேம். என்று அறியாமல்