பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் உரைநடை 38. புனர் ஜன்மம் புனர் ஜன்மம் உண்டு. மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம். அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்து போகும் போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்லவந்த் கதை இதுவன்று. நான் சொல்லவந்த விஷயம் ஹிந்து ஸ்தானத்தின் புனர் ஜன்மம். 'ஹிந்து ஸ்தானம் என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக் கூட்டத்திற்கு பாரத ஜாதி என்றும் பெயர் சொல்வதுண்டு. பாரத ஜாதி பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை, முதல் கன்யாகுமரி முனை வரையுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்குப் பாரத தேசம்' என்று பெயர் உண்டாயிற்று. கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாகவே மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறித் தலைமுறை தலைமுறையாக