பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இப்போது, மறுபடியும் அந்தக் குப்பையிலிருந்து வெளிப் பட்டு, தைரியமென்னும் கங்காநதியில் ஸ்நானம் செய்து விட்டு, நமது பாரத ஜாதி தனது வானத்திலே தோன்றும் ஸஆர்யோதயத்தை அன்புடன் அழைத்து வாழ்த்துக் கூறுகின்றது. மரணமில்லாத இந்த ஹிந்து நாகரிகமாகிய கற்பக விருகூடித்துக்கு ஆதியிலே விதையூன்றியவர்கள் வேத ரிஷிகள். அவர்கள் எக்காலத்திலே-எத்தனை நூற்ருண்டு களின் முன்னே-இருந்தார்களென்பதைக் கணக்கிட்டுச் சொல்ல, நவீன ஆராய்ச்சி யாதொரு கருவியுமில்லாதிருக் கிறது. ஹிமவத் பர்வதம் எப்போதுண்டாயிற்று? யாருக்குத் தெரியும்? வேதரிஷிகள் எக்காலத்தில் வாழ்ந் தனர்? எப்படிச் சொல்வது? 40. ஸ்வாமி அபேதாருந்தர் 21, gు అడి) 1906 இந்த வாரத்தில் சென்னையிலே நடந்த சமாசாரங் களுக்குள் வெகு முக்கியமானது ஸ்வாமி அபேதாநந்தரின் வரவே யாகும். பாரத நாட்டு மஹரிஷிகளில் ஒருவரும் ஜகத் பிரசித்தருமாகிய ஸ்வாமி விவேகாநந்தரது ஸ்க பாடியும் பூரீமத் ராமகிருஷ்ண பரப்ரஹ்மத்தின் சிஷ்யரு மான அபேதாநந்தர் பல வருஷ காலமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில் மண்ணுசையிலும் பொன்னசையிலும் அமிழ்ந்துகிடக்கும் மனிதர்களிடம் வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு செய்வித்து பெருங்கீர்த்தி பெற்றுவிட்டு, இப்போது தமது தாய் நாட்டிற்கு மீண்டும் வந்திருக்கிழுர்,