பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இவருக்குச் சென்னையில் நடந்த உபசரணைகளையும் இவர் சென்னையிலே செய்த உபந்நியாசக் கருத்துக் களையும் பற்றி மற்ருே.ரிடத்திலே பிரஸ்தாபம் செய்திருக் கிருேம். இவரும் இவருடைய கூட்டாளிகளும் கடல்மீது எத்தனையோ ஆயிரம் காதம் கடந்துபோய் இத்தேசத்தின் பெயர் கேட்டவுடனே அந்நியர்கள் முடி வணங்குமாறு செய்யும் நன்மைக்கு நம்மவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த மஹான்கள்தாம் என்ன கைம் மாறை எதிர்பார்க்கிருர்கள்? யாதொரு பற்று மில்லாமல், இரந்து உண்பவர்களாய் உலகத்தாரின் ஞான வழிக்கு ஏற்பட்டிருக்கும் மாயையாகிய குருட்டுத் தன்மையை நீக்கி, ஒளியளிக்க வேண்டுவதே கடமையாகக் கொண்டு நாள் கழித்துவரும் இப் பெரியார்களுக்கு உலகம் அளக்கத் தகாதவாறு கடமைப் பட்டிருக்கிறது. ஆத்மாவே உண்மை யென்றும், அதனை மறைத்து நிற்கும் மற்றத் தோற்றங்களெல்லாம் வெறும் மயக்கமே என்றும் போதனை செய்யத் தலைப்பட்டிருக்கும் அபேதாநந்த ஸ்வாமிகள், அந்தப் பாரமார்த்திக நிலைமை அறியாமல் வியாவஹாரிக நிலையிலே உழலும் நம்மவர்களுக்கக்கூட மிகவும் பயன் படத்தக்க சில ஹிதோபதேசங்கள் தந்திருக்கின்ருர். ஞாயிற்றுக் கிழமை மாலை டவுன் ஹால் வெளி மைதானத் திலே இவர் உபந்நியாசம் புரிந்த காலத்தில் நம்மவர் களின் பேடித்தன்மையையும் பயங்காளித் தன்மையையும் பற்றிப் பேசியது கொஞ்சமில்லை. 'ஆண்மை இழந்து பள்ளத்தில் விழுந்து கிடக்கிறீர்களே! எழுந்து நின்று உங்களது புருஷத் தன்மையை நிரூபித்துக்கொள்ளுங்கள்' என்று இத் தேசத்தாரை நோக் கி க் கூறுவதில் விவேகாநந்தர் எம்மட்டு ஆத்திரம் கொண்டிருந்தாரோ அம்மட்டு அபேதாநந்தரும் கொண்டிருப்பதைக் காண் கிருேம். தீர புத்திரர்களாகிய ஆரியர்கள் ஏதோ ஒரு