பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லியின் பொற்காலமும் பாரதியின் கிருதயுகமும் 3.லக . வாழ்க்கையையும் மனிதகுல விடுதலையையும், விkேr.7சனத்தையும் பற்றிய ஷெல்லியின் தத்துவ தரிசனம் அவன் முதன் முதலில் படைத்த நெடுங் கவிதைப் படைய லா ன *ராணி மாப்' (24een Mah) என்ற புரட்சிகரமான நாவிலேயே இடம் பெற்றுவிட்டது எனச் சொல்லலாம். அதனை எழுதியபோது ஷெல்லிக்கு வயது பதினெட்டு. அத்தனை இளவயதில் படைத்த அந்நூல் இலக்கியத் தரத்தில் சிறப்பாக அமையவில்லையென்றும், அதில் தான் மேற் கொண்ட தத்துவ விமர்சனம் முதலியவை அத்தனை பக்குவ மும் பண்பும் எழுதவில்லையென்றும், ஷெல்லியே பத்தாண்டு களுக்குப் பின்னர் 1821-ம் ஆண்டில் - 'எக்ஸாமினர்' பத்திரிகை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான் என முன்னர் பார்த்தோம். ஷெல்லியின் பிற்காலப் படைப் புக்களோடு ஒப்பிடும்போது, 'ரானி மாப்' இலக்கியத் தரத்திலும் வடிவ அமைதியிலும் தாழ்ந்ததுதான், இதனைக் குறித்து இலக்கிய விமர்சகர்களிடையே கருத்து வேற்றுமை இல்லை. எனினும் ஷெல்லி அந்நூலில் தெரிவித்துள்ள பல் வேறு புரட்சிகரமான கருத்துக்களை ஏற்க மறுப்பவர்களும், அந்தக் காலத்தில் ஷெல்லியிடம் தென்பட்ட சரித்திர அறிவு : மதக் கோட்பாடுகள் பற்றிய அறிவு ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளைப் பெரிதாக்குபவர்களும் , அ ந் நூ லை ச் 100