பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிற்பதற்கோர் இடம் கொடுங்கள்; இந்த உலகத்தையே அசைய வைக்கிறேன்” என்று கூறிய கிரேக்கத் தத்துவ ஞானியும் விஞ்ஞானியுமான ஆர்க்கிமிடிஸின் கூற்றும் ஒன்றாகும். இந்தக் கூற்றைப் பொறித்த செயலே, ஷெல்லி பின் தன்னம்பிக்கையையும், துணிவாற்றலையும், புரட்சித் தன்மையையும் புலப்படுத்துகின்றது. ஆம், அவனே தனது 60 சட்ட அந்த பிராமித்தியூஸ்' என்ற கவிதை நாடகத்தின் முன்னுரைலே குறிப்பிடுவது போல், “இந்த உலகத்தைச் சிர ைட்டிப்பதற்கான ஒரு வேட்கையே?” அவனுக்கிருந்தது.. 'ராணி மாப்' அத்தகைய வேட்கையில் விளைந்த சித்திரம் தான். இங்கு நாம் அதன் அமைப்பையும், கருத்தையும் ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. அதன் கதையம்சம் வருமாறு: ராணி மாப் சர்வமும் அறிந்த ஒரு தேவதை. அவள் ஒரு மந்திர ரதத்தில் ஏறி, தூங்கிக் கொண்டிருக்கும் கன்னியொருத்தியிடம் வந்து, தூங்கும் உடலிலிருந்து அந்தக் கன்னியின் ஆத்மாவை மட்டும் கூட்டிக் கொண்டு வான ' மண்டலத்திலுள்ள அற்புதமானதோர் அரண்மனைக்குச் செல்கிறாள். அங்கிருந்து அவர்கள் இருவரும் பூலோகத்தைப் பார்க்கிறார்கள். அப்போது ராணி மாப் அந்த ஆத்மா வுக்கு உலகின் இறந்தகால, நிகழ்கால், வருங்கால நிகழ்ச்சிகளையெல்லாம் வருணித்துக் கூறுகிறாள்; உலகத்தின் தீமைகளையும் இனம் காட்டுகிறாள். பின்னர் வருங்காலத்தில் இத்தகைய தீமைகளெல்லாம் நீங்கி, புதியதொரு பொற் காலம் மலரும் என்று கூறி, அந்தக் கன்னியின் ஆத்மாவை மீண்டும் அவனது தூங்கிக் கொண்டிருக்கும் உடலுக்கு - அனுப்பி வைக்கிறாள், ராணி மாப் அந்தக் கன்னியின் ஆத்மாவுக்குக் கற்றுக் கொடுத்த விஷயம் இதுதான்: மன்னர்கள் இயற்கைக்கு மாறானவர்கள்; கொடுங்கோலர்கள். - மதகுருக்களும், ராஜ தந்திரிகளும் யுத்தம் முதலிய கொடுமைகளுக்கு மன்னனுக்கு உடத்தை யாக இருக்கிறார்கள், உலகத்தின் செல்வம் மனி தனின் ஆத்ம உணர்ச்சியை நச்சுப்படுத்துகிறது. வாணிபம் மனித வாழ்க்கையை உருக்குலைக்கிறது. நல்ல வாசகங் , களும், நற்பணியுமே நல்வாழ்க்கையைத் தரும். மத நம்பிக்கை 102