பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுகளை நீக்கி, பரிபூரணத் தன்மை எய்த முடியும் என்றும் அவன் கருதுகிறான், உலகத்தில் மனிதர்களிடையே பல் வேறு. குறைபாடுகள் * நிலவிய போதிலும், ஒவ்வோர் இதயத்திலும் பரிபூரணத்துவத்துக்கான வித்து இருக்கத்தான் செய்கிறது (Yet every heart contains perfection’s germ) என்று ஷெல்லி கூறுகிறான் (ராணி மாப் படலம் 5, வரி 14 7). எனவே ஷெல்லியின் புதிய உலகத்தில் எல்லா மனித அம்சங்களும் பரிபூரணத்துவம் எய்தின' (Thus Earnan things were perfected) என்றும், இத்தகைய பரிபூரணத்துவம் எய்தும் காலத்தில் 'மனிதன் பூமியின் மீது அமரநிலை எய்தி நிற்கிறான்' (Men stands immortat upon earth)' என்றும் அவன் கூறுவதைப் பார்த்தோம். இந்தப் பரிபூரண நிலையில் மனிதன் இயற்கையோடிசைந்த வாழ்க்கையை மேற்கொண்டு, நோயும் நொடி.யுமற்று வாழ்வான் என்றும், அதுவே அமர வாழ்க்கை என்றும், அந்த அமர நிலையை இங்கு இந்த உலகத்திலேயே மனிதன் எய்துவான் என்றும் ஷெல்லி கருதுகிறான், அதாவது மனிதகுலம் என்றென்றும் அசிலின்றி வாழும்; மனிதன் . நிறைவாழ்வு வாழ்ந்து மரணத்தை , எய்துவான்; அவசியம் என்ற சக்தியின்) தவிர்க்க முடியாத இயக்கத்தால், மரணத்தின் , அவசியம் அந்தப் பொற்காலத்தில் வேதனையும் பயமுமற்று, மெல்ல, வும் மெதுவாகவும் வந்து சேரும் (Mild was the slow reces- sity of death-'ராணி மாப்' படலம் 8; வரி 57); அந்த உலகத்தில் மரண பயம் இருக்காது-இவ்வாறுதான் ஷெல்லி மனிதனின் அமர நிலையைக் கணித்துக் கூறுகிறான். ' பாரதியை நன்குணர்ந்தவர்கள், ஷெல்லியின் 'ராணி ' மாபி' ல் வருணிக்கப்பெறும் பொற்கால லட்சியம் அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது என்பதை எளிதில் அறிவார் கள். சொல்லப்போனால் பாரதியின் வசனப் 'படைப்பான 'ஞான ரதம்' ராணி மாபின் - வடில் அமைதியையே பின் பற்றிய தி} எனலாம். 'ராணி மார்பில் மாப் என்ற அந்த முக் காலமும் உணர்ந்த தேவதை, அந்தக் கன்னியின் ஆவியை ஒரு மந்திர ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, உலகத்