பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம், லவகுசார்க்கமே என்று தான் சொர்க் ஆனந்தத்தைத் தருவார் என்று நான் நம்பவில்லை என்று சொன்ன விவேகாநந்தரைப் போல், சொர்க்கத்தைப் பற்றி? அக்கறை காட்டுல தைக் காட்டிலும், இந்த உலகத்தவரின் துன்பங்களைப் போக்க வழி தேடுவதே முதற்பெருங் சு.மை என்று கருதியவன் பாரதி. அவனுக்கோ " செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் சேர்ந்திடலாம்” என்ற நம்பிக்கை இல்லை. எனலே! சொர்க்கமென்று சொன்னால் அது இங்கேலே தோன்றியாக வேண்டும் என்று அவன் விரும் பினான் ; அதே போல் மனிதர்களும் அந்தப் பூலோக சொர்க் கத்தில் இங்கேயே அமர நிலை எய்த வேண்டும் என்றும் விரும்பினன்' . இதனால் தான் அவள் 'இங்கே இங்கே? என்பதை மறக்காமல், வீட்டுக் கொடுக்காமல் அழுத்தமாகக் , கூறுகிறான். சில உதாரணங்களை இங்கு பார்ப்போம் : Eண் பயனுற வேண்டும்; வானகம் இங்கு தென்பட வேண்டும். (வே:abாடும்) இந்திரனார் உலகினிலே நல்லின்பம் இருக்கு தென்பார்; அதனை இங்கே - கொண்டெய்தி..., (சக்திக் கூத்து) இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டும்..... (வையம் முழுதும்) நீச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்... (விநாயகர் நான் . மணி மாலை 4} அமரத் தன்மை எய்தவும் இங்கு நாம் பெறலரம்..... .

  • {வி, நா, மா. 5)

- உணர்வீர், உணர்வீர், உலகத்தீர்! இங்குப் புணர்வீர் மேரர் உறும் போகம்! (வி. நா. மா.5)