பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுரிமை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஷெல்லி அந்தக் கோட் பாடுகளைப் பெண்களுக்கும் உரியதாகக் கருதினான். எனவே அவன் தான் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் கண்டு புழங்கினான். அவற்றை அவள் கண்டிக்கவும் தவறவில்லை, அவன் தனது ரோணி மரபில் வாணி.. வளர்ச்சியானது தங்கத்தைக் கடவுளாகப் போற்றி, உலகத்திலுள்ள ஏனைய விஷயங்களையெல்லாம் ஏளன.kாக மதித்து, மனித வாழ்க்கையையே கறைப்படுத்தியது பற்றிக் கூறியதை முன்னர் பார்த்தோம் , வாணிபமானது எல்லாவற்றையுமே வியாபார மயமாக்கி விட்டது என்பதையும் ஷெல்லி காண் கிருன். எப்படி? அதே “ராணி மாபி' ல் அவன் பின்வருமாறு கலுகிறான்;

  • 'எல்லாப் பொருள்களுமே விற்கப்படுகின்றன; (சொர்க்

கத்தின் ஒளிகூட, வியாபாரப் பண்டம் ஆகிவிட்டது: பூமியின் வற்த அன்புப் பரிசுகள், அதல பாதாளத்தின் ஆழத்தில் பதுங்கி கிடக்கும் சின்னஞ் சிறிய, மிகவும் வெறுக்கத்தக்க விஷயங்கள், நமது வாழ்க்கையின் எல்லாப் பொருள்களும், வாழ்க்கையும் கூட, சட்டங்கள் அனுமதிக்கும் சுதந்திரத்தின் பிச்சைப் புத்திச் சலுகைகள், மனிதனின் நட்புறவு, மனித பாசம் குடிகொண்ட அவனது இதயம் தன்னிச்சையாகவே அவனைச் செயலாற்றத் தூண்டும் அந்தக் கடமைகள்-இவை 127